Skip to main content

ஆஜரான ரவீந்திரநாத்; வனத்துறை விசாரணை

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

nn

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி இரண்டு வயது சிறுத்தை புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வனப்பாதுகாப்பு அலுவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய அந்த சிறுத்தை புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது.

 

இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்கு தற்காலிக கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், ‘நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிக கிடை அமைத்தவரை கைது செய்வதா?' என கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் வனத்துறை தங்களை காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி  ஓ.பி.ரவீந்திரநாத்தின் நிலத்தின் மேலாளர்கள் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வந்தனர்.

 

இந்த விவகாரத்தில் தோட்டத்தின் உரிமையாளரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் உள்ளிட்ட மூன்று பேருக்கு வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் தோட்டத்தின் மேலும் 2 உரிமையாளர்கள் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகிய மூன்று பேரும் சம்மன் கிடைக்கப்பட்ட இரண்டு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் தேனி வனச்சரக அலுவலகத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தற்பொழுது ஆஜரான நிலையில் அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்