
அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த 18 வயது இளைஞன் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்கு பைக்கில் வந்த 18 வயது கொண்ட இளைஞன் பள்ளிக்குள் நுழைந்து சரமாரியாக சுட்டதில் பள்ளி மாணவர்கள் 18 பேர்ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞர் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு அவரது சமூக வலைதள பக்கத்தில் தான் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை ஒரு பெண்ணுடன் சேர் செய்து இருக்கிறார் என்ற தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இளைஞர் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மாணவராக இருந்ததாகவும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு முன்னதாக அவரது பாட்டியையும் அவர் சுட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் வரும் சனிக்கிழமை வரை அமெரிக்காவில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)