ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகருக்கு அருகே உணரப்பட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 130 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது பலி எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. பக்டிகா கோஸ்ட் நகரில் மட்டும் மட்டும் இதுவரை காயமடைந்த நிலையில் 500 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.