Powerful earthquake in Morocco 151 people 

Advertisment

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 151 பேர் உயிரிழந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளன.

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 151 பேர் உயிரிழந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.