அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர்மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன, முக்கியமாக பெண்கள் விஷயத்திலும்தான். பார்ன்ஸ்டார் நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், ’புல் டிஸ்குளொசர்’ என்னும் அவருடைய வாழ்க்கை கதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2006ஆம் ஆண்டு தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், ”அவருடன் வைத்துக்கொண்ட உடலுறவில், அவர் திருப்தி அளிக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்துள்ளார். அப்படி இருந்தபோதிலும் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர், இதை ஒப்புகொண்டுள்ளார். இந்த விஷயத்தை மறைப்பதற்காக அவருக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டார்மி அந்த புத்தகத்தில், ”2016ஆம் ஆண்டு ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரங்களின் போது, அவர் வெற்றிபெற்று அதிபராக கூடாது என்று நினைத்தாராம்” என்றும் குறிப்பிட்டிருப்பதாக குவார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.