Skip to main content

துணை அதிபர் சென்ற விமானம் மாயம்; மலாவி நாட்டில் பதட்டம்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Plane carrying Malawi Vice President goes missing

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா(51) இருந்து வருகிறார். இவர் நேற்று(10.9.2024) தலைநகர் லிலொங்வேயில் இருந்து விமானத்தின் மூலம் புறப்பட்டுச்சென்றார். துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் 9 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். லிலொங்வேயில் இருந்து புறப்பட்ட விமானம் மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில்தான் துணை அதிபர் சென்ற விமானம் பாதியிலேயே மாயமாகியுள்ளது. விமானம் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விலகியதால், விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா மாயமான விமானத்தைத் தேட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது மாயமான விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. துணை அதிபர் சென்ற விமானம் மாயமாகியுள்ளதால் மலாவி நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மலாவி துணை அதிபர் விமான விபத்தில் மரணம்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Malawi Vice President Saulos Chilima incident

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா (வயது 51) இருந்து வந்தார். இவர் நேற்று (10.06.2024) தலைநகர் லிலொங்வேயில் இருந்து விமானத்தின் மூலம் புறப்பட்டுச் சென்றார். துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் 9 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். லிலொங்வேயில் இருந்து புறப்பட்ட விமானம் மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இத்தகையச் சூழலில்தான் துணை அதிபர் சென்ற விமானம் பாதியிலேயே மாயமாகியது. விமானம் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விலகியதால், விமானம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா மாயமான விமானத்தைத் தேட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மாயமான விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. துணை அதிபர் சென்ற விமானம் மாயமாகியுள்ளதால் மலாவி நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மலாவி நாட்டு துணை அதிபர் சவுலோஸ் சிலிமா உட்பட 9 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மலாவியின் அதிபர் லாசரஸ் சக்வேரா இன்று (11.06.2024) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, “திங்கட்கிழமை (நேற்று - 10.06.2024) காணாமல் போன மலாவி துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்” என்று கூறியுள்ளார். இந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

Next Story

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
 Minister of Tamil Nadu welcomed the Vice President

குடியரசு துணைத் தலைவர் 29 ஆம் தேதி காலை 8 மணிக்கு குடும்பத்தினருடன் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் தரிசனம் செய்வதற்கு 2 ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தடைந்தார்.

தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, தமிழகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை தெரிவித்து தமிழக முதல்வரின் சார்பாக வரவேற்றார். இதனைத் தொடர்ந்து  அவருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். கோவில் வாயிலிருந்து கோவிலில் உள்ள 21 படி வரை மின்கல வாகனத்தில் சென்றார். பின்னர் குடும்பத்துடன் கோவில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். துணை குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களுக்கு அனுமதி  இல்லை. இவர் வருகையையொட்டி சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பக்தர்கள் யாரையும் காலை 7:00 மணி முதல் 11 மணி வரை அனுமதிக்கவில்லை. மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, தரிசனம் செய்வதற்குத் தமிழக அரசு மற்றும் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியதற்காக குடியரசு துணைத் தலைவர்  நன்றி தெரிவித்துச் சென்றார்.