Skip to main content

ஒமிக்ரானுக்கு எதிரான பிரத்தியேக தடுப்பூசி; ஆய்வக சோதனைகளை தொடங்கியது பைசர்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

pfizer

 

இந்தியா மற்றுமின்றி  பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது.

 

இந்தச்சூழலில், ஏற்கனவே கரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள், தங்களது தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆராயத் தொடங்கின. மேலும் பைசர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஒமிக்ரானுக்கு எதிராக, பிரேத்தியேக தடுப்பூசியை தயாரிக்கப்போவதாக அறிவித்தன.  

 

இந்தநிலையில் பைசர் தடுப்பூசி நிறுவனம், ஒமிக்ரான் வகை கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள பிரேத்தியேக தடுப்பூசியின் ஆய்வக பரிசோதனைகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் பைசர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ஒமிக்ரான் துணை மாறுபாட்டை கவலைக்குரியதாக அறிவியுங்கள் - ஆய்வை சுட்டிக்காட்டி அமெரிக்க நிபுணர் கோரிக்கை!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

corona

 

இந்தியா மற்றுமின்றி  பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது. இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 மாறுபாடு அதிகம் பரவியது.

 

இந்தநிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஆய்வின் ஒன்றின் முடிவுகள், பிஏ.2 மாறுபாடு ஒமிக்ரானை விட அதிகம் பரவலாம் எனவும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும், தடுப்பூசி தரும் எதிர்ப்பு சக்தியிலிருந்து பிஏ.2 மாறுபாடு தப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆய்வை சுட்டிக்காட்டியுள்ள முன்னணி பொது சுகாதார நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங், ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2வை கவலைக்குரிய கரோனா வகையாக அறிவிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.