Published on 25/01/2022 | Edited on 25/01/2022
இந்தியா மற்றுமின்றி பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது.
இந்தச்சூழலில், ஏற்கனவே கரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள், தங்களது தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆராயத் தொடங்கின. மேலும் பைசர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஒமிக்ரானுக்கு எதிராக, பிரேத்தியேக தடுப்பூசியை தயாரிக்கப்போவதாக அறிவித்தன.
இந்தநிலையில் பைசர் தடுப்பூசி நிறுவனம், ஒமிக்ரான் வகை கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள பிரேத்தியேக தடுப்பூசியின் ஆய்வக பரிசோதனைகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் பைசர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.