![Peshawar blast-lost toll rises to 90](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bor-xuXF9Iq4RZrygbOt50zPhha2WGT3rUjgodxIxZY/1675146769/sites/default/files/inline-images/n223161.jpg)
பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று வழக்கம்போல் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் மசூதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்பொழுது வரை 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் மசூதி கட்டிடத்தின் ஒருபக்கம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பகுதியில் வழியே மக்கள் மீட்கப்படுகின்றனர் என்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 28 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது இந்த சம்பவத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.