/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DFREGR.jpg)
பாகிஸ்தான் நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தனது இரு குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த பெண் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அப்போது பேசிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆண்மை நீக்க தண்டனை வழங்குவதே இம்மாதிரியான சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இரசாயனம் மூலமாக நீக்கும் அவசரச் சட்டத்தை உருவாக்கி, அந்தநாட்டின் அதிபர் ஒப்புதலுக்காகக் கடந்தாண்டு இறுதியில் அனுப்பியது. இதற்கு அந்தநாட்டின்அதிபரும்ஒப்புதல் அளித்தார்.
இந்தநிலையில், தற்போதுபாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இரசாயனம் மூலமாக நீக்கும் சட்டம் அந்தநாட்டின்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இரசாயனம் மூலமாகஆண்மை நீக்கும் சட்டம் தென்கொரியா, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்காவின் சில மாகாணங்களிலும்அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)