Skip to main content

"புல்வாமா தாக்குதலில் அரசுக்கு நேரடித் தொடர்பு" -பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேச்சு...

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

pakistan minister claims his country's hand is on pulwama incident

 

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பிப்ரவரி 14, 2019- அன்று, ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இந்திய வீரர்கள் சென்ற பேருந்து மீது 200 கிலோ எடைகொண்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியது. பயங்கரவாதிகளின் இந்த சதித்திட்டத்தால் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை செவ்வாய்க்கிழமை இதற்கான குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. சுமார் 13,000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

அதன்படி, 35 கிலோ அதிசேத விளைவிப்பு ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் மார்ச் - மே 2018-ற்கு இடையே மூன்று தடவையாக பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் - ஜம்மு எல்லையின் ஹிராநகர் செக்டாரிலிருந்து ஊடுருவி இந்தப் பொருட்களை இங்கு கொண்டு வந்துள்ளனர் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும், புல்வாமா தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில், பாகிஸ்தான் அரசிற்கு பங்கு இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்