Skip to main content

சம்பளம் கேட்ட ஊழியர்... சிங்கத்தை விட்டு கடிக்க வைத்த கொடூர முதலாளி...

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

பணியாற்றியதற்கான ஊதியத்தை கேட்ட தொழிலாளியை, அவரது முதலாளி சிங்கத்தை வைத்து கடிக்க வைத்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

 

pakistan man attacked by lion

 

 

பாகிஸ்தானின் லாகூரில் அலி ராசா என்பவர், மத கூட்டங்கள் நடத்தும் மண்டபம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த மண்டபத்தில் வேலைபார்த்த எலக்ட்ரீசியன் முகமது ரக்பி என்பவருக்கு நீண்ட நாட்களாக சம்பள பாக்கி வைத்திருந்துள்ளார் அலி ராசா. நீண்ட நாட்களாக சம்பளம் வராத விரக்தியில் அலி ராசாவை நேரில் சந்தித்து சம்பளத்தை கேட்க சென்றுள்ளார் முகமது ரக்பி.

கூலியை உடனே தரும்படி பேசியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அலி ராசா, தான் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் சிங்கத்தை முகமது ரக்பி மீது ஏவிவிட்டார். அப்போது முகமது ரக்பியின் முகம் மற்றும் கையை சிங்கம் கடித்து குதறிய நிலையில் அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிங்கத்திடம் இருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அலி ராசா மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்