பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒரு சில வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி சிறைத்தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் நவாஸின் உடல் நிலை மோசமானதால் ஜாமீன் கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை நவாஸ் ஷெரீப் நாடினார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் முதல் ஆறு வாரக்கால நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் பாகிஸ்தானில் இருந்து மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் , பாகிஸ்தானை விட்டு வெளியேற நவாஸிற்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் நீதிமன்றம் கொடுத்த ஜாமீன் அவகாசம் முடிவடையும் நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சார்பில் நிரந்தர ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது . இதனை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கோட் லாக்பாத் சிறைச்சாலைக்கு திரும்ப உள்ளார்.
முன்னதாக , அல் -அஸிஸியா உருக்கு ஆலை தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிர்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் சுமார் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கியது. பின்னர் சில காரணங்களுக்காக லாகூரில் உள்ள கோட் லாக்பாத் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அதே போல் உலகளவில் பரவலாக பேசப்படும் பனாமா பத்திரிகையில் நவாஸ் ஊழல் செய்ததாக செய்தி வெளியிட்ட நிலையில் இது தொடர்பான வழக்குகளும் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் ஒரு முறை கூட ஐந்து ஆண்டுக்கால பிரதமர் பதவியை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.