Published on 24/04/2019 | Edited on 24/04/2019
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 500 பேர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கொழும்பு நகருக்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்தது. இந்த குண்டுவெடிப்பு பதற்றத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டு இருந்த மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.