Skip to main content

ரஷ்யா-வுக்கு பதிலடி... சவுதியின் முடிவால் 29 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்த கச்சா எண்ணெய் விலை...

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

கச்சா எண்ணெய் விலை கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது.

 

Oil price crashes after Saudi Arabia decrease selling price

 

 

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒபெக் ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்த காரணமாக இந்த திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்ற சூழலைச் சந்தித்து  வருகின்றன. இந்நிலையில் கச்சா எண்ணெய் தேவையைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. எனவே இதனைச் சரி செய்யும் விதமாக, சவுதி தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

ஆனால் உற்பத்தியைக் குறைப்பதில் சுமுகமான முடிவு எட்டப்படாத சூழலில், இன்று காலை கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாகச் சவுதி அறிவித்துள்ளது. சவுதிக்கு அடுத்து அதிகப்படியாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ரஷ்யா, ஒபெக் முடிவுக்கு ஒப்புக்கொள்ளாத சூழலில், ரஷ்யாவுக்குப் பதிலடி தரும் வகையில் சவுதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவுதியின் இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 31 டாலர் ஆகக் குறைந்துள்ளது. 1991க்கு பிறகு கடந்த 29 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு சரிவைச் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும். 

 

 

சார்ந்த செய்திகள்