Skip to main content

அலரி மாளிகையில் குடியிருக்கப் போவதில்லை - ரணில் அறிவிப்பு

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

பகர

 

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 12 ஆம் தேதி பதவியேற்றார். 

 

இந்நிலையில் விரைவில் இலங்கை அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த ரணில் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் பிரதமர் தங்கும் அரசு குடியிருப்புக்கு இதுவரை அவர் செல்லவில்லை. செலவுகளை குறைக்கும் பொறுப்பு தனக்கு உள்ளதாக கூறிய அவர், அலரி மாளிகையில் தான் தங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அனைத்து அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிபர் ரணில் கேள்விக்கு முதல்வர் மம்தா அளித்த பதில்! - வைரலாகும் வீடியோ

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Chief Minister Mamata's answer to President Ranil's question! A viral video

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 12 நாள் அரசுமுறைப் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். செப்டம்பர் 23 வரை இந்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும், ஸ்பெயினில், மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கும் பயணப்பட்டு தொடர்ச்சியான வணிகக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-22 தேதிகளில் கொல்கத்தாவில் 7வது வங்காள உலக வணிக உச்சி மாநாடும் (பிஜிபிஎஸ்) நடக்கவிருக்கிறது.

 

இந்த நிலையில், மம்தா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை தற்செயலாக சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மம்தா பானர்ஜியிடம், “எதிர்க்கட்சி கூட்டணிக்கு (இந்தியா) தலைமை வகிக்க போகிறீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மம்தா, “இது மக்களை சார்ந்தது தான். அவர்கள் ஆதரித்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரலாம்” எனப் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

இது குறித்து ட்விட்டரில் மம்தா பானர்ஜி, “இலங்கையின் திறன்மிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துபாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் என்னை சந்தித்தார். அப்போது என்னிடம் சில கலந்தாய்வு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் அழைத்தார். அவர் அழைப்பு விடுத்தது என்னை நெகிழ வைத்தது. மேலும், கொல்கத்தாவில் நடைபெறும் 'பெங்கால் உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2023' இல் பங்குபெற அவரை அழைத்தேன். தொடர்ந்து அவர், என்னை இலங்கைக்கு பயணம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடல் இனிமையாகவும் அதேசமயம் ஆழமான சிந்தனையையும் ஏற்படுத்தியது” எனப் பதிவிட்டிருக்கிறார். 

 

 

Next Story

பிரிட்டிஷ் ராணி இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் இலங்கை அதிபர்!

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

The President of Sri Lanka participates in the funeral of the British Queen!

 

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் இலங்கை அரசின் சார்பாக, அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்க உள்ளார். ராணி மறைவையொட்டி, வரும் செப்டம்பர்- 19 ஆம் தேதி அன்று தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 

 

1972- ஆம் ஆண்டு இலங்கை குடியரசு ஆகும் வரை அந்நாட்டு ராணியாக இரண்டாம் எலிசபெத் இருந்தார். 1954 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு ராணி பயணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.