Skip to main content

2021ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

nobel prize in chemistry

 

2021 ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுவருகின்றன. நேற்று முன்தினம் (04.10.2021) மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றைத் தொடாமல் உணரக்கூடிய கருவியைக் (சென்சார்) கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு, 'சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதில் அற்புதமான பங்களிப்பை அளித்ததற்காக' சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசல்மேன், ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

 

அதைத்தொடர்ச்சியாக இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு, பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யூசி மேக்மில்லனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்