கடந்த வாரம் வலதுசாரி தீவிரவாதி ஒருவன் நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினான் இதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் முஸ்லீம் குடியேற்றதை எதிர்த்து இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக அவன் கூறினான். இதனையடுத்து இந்த வெள்ளிக்கிழமை நியூஸிலாந்து நாடு முழுவதும் பெண்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆறுதலையும், ஆதரவையும் காட்டும் வகையில் இஸ்லாம் பெண்கள் போல ஹிஜாப் அணிந்தனர்.
பெண்கள் ஹிஜாப் அணிவைத்து என்பது இஸ்லாமிய பாரம்பரிய முறைகளில் ஒன்றாகும். மேலும் இது இஸ்லாமிய பெண்களின் கடவுளின் பக்தி மற்றும் அவர்களின் மதத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை குறிப்பதாக இஸ்லாத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. இஸ்லாமிற்கு எதிராக நடந்த இந்த தாக்குதலுக்கு எதிராக கிறிஸ்துவம் உட்பட பல மதங்களை சேர்ந்த பெண்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். மதங்களை கடந்து மக்கள் மற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.