இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவி ஏற்கும் நிலையில் அவர் பதவி ஏற்றவுடன் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ப்ரித்தி படேல் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும் எனவும் கருதப்பட்டது.
இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், நேற்று பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை பிரிட்டன் மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக், லிஸ்டர்ஸ் ஆகியோர் முன்னிலையிலிருந்த நிலையில் இவர்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டர்ஸ் பிரிட்டனின் அடுத்த பிரதமராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று லிஸ் ட்ரஸ் பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் அவரது பதவி ஏற்கப் போவதை எதிர்க்கும் வகையில் இங்கிலாந்து உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வழங்கி அதை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.