Skip to main content

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா? ரோவரை களமிறக்கும் நாசா!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

nasa

 

நிலவில் கால் வைத்துவிட்ட மனிதன், அதனைப் பகுதிகளாக பிரித்து விற்பனை செய்யவும் தொடங்கிவிட்டான். ஆயினும் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளையில் மனிதன், செவ்வாய் கிரகத்தை ஆராயும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறான்.

 

அவ்வாறு செய்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளுக்கு, முக்கியமான கேள்வியாக இருப்பது செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா, இல்லையா என்பதே. இந்தநிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, கடந்த வருடம் விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் பெர்சவரன்ஸ் என்ற விண்ணூர்தி (ரோவர்)  அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (18.02.2021), அந்த விண்ணூர்தியை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்ளப்போவதாக நாசா அறிவித்துள்ளது. இந்த விண்ணூர்தி மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என கண்டறிய வாய்ப்பு ஏற்படும். 

 

இதனிடையே நாசா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதற்கான உணவு முறையையும், அதன் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்பதற்கான போட்டி ஒன்றை நாசா அறிவித்துள்ளது. இப்போட்டியில் பங்குபெற்று விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதற்கான உணவு முறையையும், தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 3.6 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும். அதுமட்டுமின்றி செவ்வாய்க்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவு சமைக்க அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் எனவும் நாசா அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

“8 ஆண்டுகளில் நாம் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கியிருப்போம்” - எலான் மஸ்க்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
elon musk about space x attempt 3rd time

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலவிற்கும், செவ்வாய் கோளிற்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒன்றை உருவாக்கி, அதை செயல்படுத்தும் முயற்சியில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ராக்கெட், 33 என்ஜின்களுடன் 400 அடி உயரத்தில், உலகின் மிகப்பெரிய ராக்கெட் என்ற சிறப்பம்சத்துடன் தயாரானது. 

இந்த ராக்கெட்டின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நிலையில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களிலே வெடித்துச் சிதறியது. பின்பு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது சோதனை முயற்சி நடத்தப்பட்டது. அப்போது, ராக்கெட்டிலிருந்து விண்கலம் தனியாகப் பிரிந்த பிறகு பூஸ்டர் வெடித்துச் சிதறியது. 

இந்த நிலையில் மூன்றாவது சோதனை முயற்சி, அடுத்த மாதமான பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதும் மூன்றாவது சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க், “இன்றிலிருந்து அடுத்த 8 ஆண்டுகளில் நாம், செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம். நிலவுக்கும் மனிதர்களை அனுப்பியிருப்போம். செவ்வாய்க் கிரகத்தில் வாழ நிறைய வேலைகள் இருக்கிறது. மூன்றாவது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை இந்த ஆண்டு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.