650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் நேற்று நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இரவு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 4 கோடியே 60 லட்சம் வாக்காளர்களை கொண்ட இங்கிலாந்தில், கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான தொழிலாளர் கட்சி ஆரம்பத்தில் சில இடங்களில் முன்னிலை வகித்தாலும், சற்றுநேரத்தில் பின்னடைவை சந்தித்தது.
தோல்விக்கு பொறுப்பேற்று தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஜெரெமி கார்பின் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்கப்போகும் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த வரத்து ட்வீட்டில், "பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா - இங்கிலாந்து இடையேயான நெருக்கமான உறவுகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.