aung san suu kyi

Advertisment

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இந்தச் சூழலில் வீட்டுக்காவலில் உள்ள ஆங் சான் சூகி மீது 11 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தநிலையில்ஆங் சான் சூகி மீதான வழக்குகளை விசாரித்து மியான்மர் நீதிமன்றம்,இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளைத் தூண்டியதற்காகவும், தேர்தல் பிரச்சாரத்தின் மீது கரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் அந்தநாட்டின் இராணுவ தலைமை நான்கண்டு தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்தது.

இந்தநிலையில்சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்ததுமற்றும் சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளைவைத்திருந்தது ஆகியவற்றுக்காகவும், கரோனா கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பானஇன்னொரு வழக்கிலும்ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துமியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை வீட்டுக்காவலில் இருந்து அனுபவிக்கஆங் சான் சூகிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.