ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் கடந்த 2013 ஆம் ஆண்டு காசநோயால் உயிரிழந்த நிலையில், அவரின் காரை 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் ஒரு கிராமத்திலிருந்து தாலிபான்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
உலகையே உலுக்கிய நிகழ்வான அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைப்பை உருவாக்கிய முல்லா உமரின் வெள்ளை நிற டொயோட்டா கார் கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு கிராமத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் நிலையில், முல்லா உமரின் வெள்ளை நிற டோயோட்டோ காரை 21 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்துள்ளனர். தோண்டி எடுக்கப்பட்ட அந்த காரை சர்ப்ரைஸாக காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியக வளாகத்தில் வைக்க தாலிபான்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.