Skip to main content

ஐசியுவில் இருக்கும் 90 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள் - பிரிட்டன் நிலவரம் சொல்லும் போரிஸ் ஜான்சன்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

boris johnson

 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் பிரிட்டனில், தற்போது மீண்டும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது அந்தநாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலையில்தான், அந்தநாட்டில் முதன்முதலாக தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது அதிகரித்து வரும் கரோனா பாதிப்புக்கு ஒமிக்ரான் வகை கரோனா காரணம் என கருதப்படுகிறது. இதற்கிடையே புத்தாண்டுக்கு பிறகு இங்கிலாந்தில் கடுமையாக கட்டுப்பாடுகள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தசூழலில் இங்கிலாந்தில் கரோனா பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இதை சொல்வதற்கு வருந்துகிறேன். ஆனால் நமது மருத்துவமனைகளில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 90 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறுப்பேற்ற வேகத்தில் ராஜினாமா-பிரதமர் இன்றி தவிக்கும் இங்கிலாந்து

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

 Resignation at the pace of taking over - England struggling without a prime minister

 


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த மாதம் 6 தேதி பதவியேற்ற நிலையில் பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு  வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

 

இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியிலிருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத்தொடர்ந்து லிஸ் ட்ரஸ் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சர்ச்சைக்குள்ளான நிலையில் அடுத்தது பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற  45 நாட்களில் தற்பொழுது பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பிரதமர் அறிவிக்கப்படும் வரை காபந்து பிரதமராக லிஸ் ட்ரஸ் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

 

 

Next Story

இங்கிலாந்து புதிய பிரதமர்; எதிர்த்து பதவி விலகும் உள்துறை அமைச்சர்

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

New Prime Minister of England; Home Minister resigns her Position

 

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவி ஏற்கும் நிலையில் அவர் பதவி ஏற்றவுடன் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ப்ரித்தி படேல் அறிவித்துள்ளார்.

 

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு  வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

 

இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், நேற்று பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை பிரிட்டன் மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக், லிஸ்டர்ஸ் ஆகியோர் முன்னிலையிலிருந்த நிலையில் இவர்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டர்ஸ்  பிரிட்டனின் அடுத்த பிரதமராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று லிஸ் ட்ரஸ் பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் அவரது பதவி ஏற்கப் போவதை எதிர்க்கும் வகையில் இங்கிலாந்து உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வழங்கி அதை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.