கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் பிரிட்டனில், தற்போது மீண்டும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது அந்தநாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலையில்தான், அந்தநாட்டில் முதன்முதலாக தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிகரித்து வரும் கரோனா பாதிப்புக்கு ஒமிக்ரான் வகை கரோனா காரணம் என கருதப்படுகிறது. இதற்கிடையே புத்தாண்டுக்கு பிறகு இங்கிலாந்தில் கடுமையாக கட்டுப்பாடுகள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தசூழலில் இங்கிலாந்தில் கரோனா பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "இதை சொல்வதற்கு வருந்துகிறேன். ஆனால் நமது மருத்துவமனைகளில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 90 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளாதவர்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.