கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்களுக்கு நடை பெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியும் நேற்று கிர்கிஸ்தான் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "கல்வியும், கலாச்சாரமும் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும். நாம் இளைஞர்களிடத்தில் தீவிரவாத சிந்தனை பரவாமல் தடுக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். இலங்கை பயணத்தின் போது அங்கு தீவிரவாதத்தின் கோர முகத்தை நன் கண்டேன். இதனை வருங்காலங்களில் தடுக்க பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்" என கூறினார்.