அமெரிக்க கம்பெனிகளில்அதிக சந்தை மதிப்புகொண்ட தரவரிசை பட்டியலில்753.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைகொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
2010-ம் ஆண்டில் இருந்து ஆப்பிள் நிறுவனம்தான் அதிக சந்தை மதிப்பைகொண்ட பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்தது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்மாதம் ஒரு டிரில்லியன்அமெரிக்க டாலர்களை கொண்டு அமெரிக்காவின் முதல் நிறுவனமாகவும் இருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அதன் மதிப்பு 746.8 அமெரிக்க டாலராக குறைந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.