A mask like this ...

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகளவில் 14.42 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12.32 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.06 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.53 கோடியை கடந்துள்ளது.

A mask like this ...

Advertisment

மருத்துவர்கள் சார்பில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம் என தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களாகவேகுறிப்பாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்தபேச்சுக்கள் மேலோங்கி இருக்கும் நிலையில் உலக நாடுகள் மத்தியிலும்கரோனாகாரணமாக இயற்கை சுவாசம்,சுற்றுசூழல்பற்றிய காரணிகள் தனிக்கவனம் பெற்றுவருகிறது.

A mask like this ...

A mask like this ...

அந்தவகையில்பெல்ஜியத்தில் சூழியல் ஆர்வலர் ஒருவர் கண்டுபிடித்துள்ள முகக்கவசம் கவனத்தை பெற்றுள்ளது. அந்நாட்டு இயற்கை சூழியல் ஆர்வலர் அலென் கண்ணாடி பெட்டியில் முகக்கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளார். OASIS PORTALBLE என பெயரிடப்பட்டுள்ள சிறுசிறு துளைகள் கொண்ட அந்த கண்ணாடி முகக்கவச பெட்டிக்குள் முன்புறமும்பின்புறமும் நறுமண தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இதனால் தனக்கு இயற்கையான காற்று கிடைப்பதுடன் ஒலி மாசு குறைகிறது. சாதாரண முகவசம்அணிவதை விட இதைஅணிவதால் அதிக பட்சம் மக்களோடு நேரடி தொடர்பு இந்த கண்ணாடி மாஸ்க் மூலம் தடுக்கப்படுவதாக அலென் தெரிவித்துள்ளார். இவர்கண்ணாடி போன்ற முகவசத்துடன் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ட்ஸ்சாலை வீதிகளில்நடந்துவருவதைகண்டு அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.