Skip to main content

14 நாட்களுக்குள் வுஹானில் இருந்த வந்தவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சீனாவில் பரவியுள்ள கொரானா வைரஸ் உலக நாடுகளையே பீதியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ பல்கலைக் கழகம்

 

 Mandatory medical examination for those arriving in Wuhan within 14 days!

 

உள்ள வுஹான் நகரில் இருந்தே இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் அந்த நகரில் இருந்து யாரும் வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யார் தும்மினாலும் உடனடியாக தூக்கிச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் வைரஸ் பரவலையும் உயிர் இழப்புகளையும் தடுக்க முடியாமல் சீனா தவித்து வருகிறது. இதைப் பார்த்து உலக நாடுகளும் தங்கள் நாட்டவர்களை பத்திரமாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மாஸ்க் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து 14 நாட்களுக்குள் வெளியேறி எங்கே சென்றாலும் அவர்களை மருத்துவப் பரிசோதனைக்காக தேடிப் பிடிக்கின்றனர்.

 

 Mandatory medical examination for those arriving in Wuhan within 14 days!

 

சீனாவுக்கு அருகில் உள்ள மக்காவ் தீவில் சூதாட்டத்திற்காக வரும் சீனர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி வருபவர்களை சோதித்து இதுவரை 6 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கடந்த 14 நாட்களில் சீனாவில் இருந்து மக்காவ் தீவுக்கு வந்தவர்களின் பட்டியலை எடுத்து வீடு, விடுகளில் அவர்களை  தேடு வருகின்றனர்.
 

இந்த நிலையில் தான் மக்காவ் - சீனா எல்லைக் கேட் பகுதியை தான்டி சீனா வில் உள்ள ஸூஹாய் என்ற நகரில் பொருட்கள் வாங்க காலை முதல் இரவு 12 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் 27 ந் தேதி முதல் இரவு 10 மணிக்கு பிறகு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. வைரஸ் மேலும் பரவத் தொடங்கியதால் இப்படி ஒவ்வொரெு நகரமாக மூடப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிகரிக்கும் மஞ்சள் காய்ச்சல் நோய்; மத்திய அரசு எச்சரிக்கை!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Central government warning on Epidemic yellow fever

மஞ்சல் காய்ச்சல் நோய் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களில் ஏடிஎஸ் ஜேசிஎப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவுகிறது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்றுதான் இந்த காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்களும், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோர்களும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியைப் செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்குப் பிறகுதான், மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். அதே போல், அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவர். இதற்காக, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள் தமிழகத்தில் மூன்று உள்ளன. பாஸ்போர்ட் மற்றும் மருத்துவ விவரங்கள் ஏதேனும் இருந்தால், தடுப்பூசி மையங்களில் பயணிகள் இந்த ஆவணங்களை காண்பித்து பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், உடல் வலி, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் ஏற்படும். மஞ்சள் காய்ச்சல், தடுப்பூசி பற்றிய விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது

Next Story

புது வைரஸ் தாக்குதல்; கேரளாவில் அதிர்ச்சி

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
New virus attack; Shock in Kerala

நிபா வைரஸ் முதல் பறவை காய்ச்சல் வரை திடீர் திடீரென உருவாகும் புது புது காய்ச்சலுக்கு பெயர் போனது கேரள மாநிலம். இது போன்ற புது வகையான நோய்கள் பரவும் நேரங்களில் கேரள-தமிழக எல்லைகளில் தீவிரமாக கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கேரளாவில் புதிய  வைரஸ் தொற்று தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'வெஸ்ட் நைல்' என்ற வைரஸால் ஏற்படும் பாதிப்பு அங்கு பரவலாகப் பேசு பொருளாகி உள்ளது. கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். இதனால் ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதி விரைத்து விடும் எனவும் கூறப்படுகிறது. வெஸ்ட் நைல் தாக்கம் கோமா வரை செல்லும் அளவிற்கு இதன் பாதிப்பு இருக்குமாம். மேலும் பசி, பலவீனம், மூளைக்காய்ச்சல், பக்கவாதம் பாதிப்புகளும் இந்த வைரஸ் தாக்கத்தால் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் ஏற்படும் காய்ச்சலால் உருவாகும் நீரிழப்பை தடுப்பதற்காக போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலை மறைக்கும் ஆடையை உடுத்திக்கொள்ள வேண்டும். கொசு வலைகள், கொசு விரட்டிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.