உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 22 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 14,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அந்தந்த நாடுகளின் அரசுகள் ஊரடங்கை கொண்டுவந்துள்ளன.
இதன் காரணமாக பெருபாலான நாடுகளின் சாலைகளில், மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் இதனை விலங்குகள் அறிந்துகொண்டதைபோல பல்வேறு நாடுகளில் ஊருக்குள் விலங்குகள் வருவதை, தொடர்ந்து ஊடகங்களில் பார்த்து வருகிறோம். அமெரிக்க தெருக்களில் மான்கள் கடந்த சில வாரங்களாக ஜாலியாக உலா வருகின்றன. இந்நிலையில், தென் ஆப்பரிக்காவில் உள்ள க்ரூஜ்ர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கள் சாலையில் படுத்து ஹாயாக தூங்குகின்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதாவது சாலைக்கு வரும் அந்த சிங்கள் தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சாலைகளில் தூங்குகின்றன.