Skip to main content

புகழ்பெற்ற கால்பந்து வீரர் வில்கின்ஸ் கவலைக்கிடம்

Published on 31/03/2018 | Edited on 31/03/2018

இங்கிலாந்து கால்பந்தாட்ட குழுவின் முன்னாள் கேப்டன் புகழ்பெற்ற ராய் வில்கின்ஸ் உடல்நலக்குறைவின் காரணமாக, லண்டன் புனித தாமஸ் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட், ஏசி மிலன், ரேன்ஞ்சர், QPR, போன்ற அணிகளுக்காக விளையாடியவர் வில்கின்ஸ். இவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் மற்றும் டாக்ஸ்போர்ட்ஸில் பண்டிதராகவும் இருந்துள்ளார்.

 

wilkins

 

FA கோப்பையில் மான்செஸ்டர் யூனைடேட்க்காக 1983லும். 1989ல் ரேன்ஞ்சருக்காக ஸ்காட்டிஸ் லீக்கிலும் ஆட்டநாயகன் பட்டம்  வென்றவர்.

தற்போது 61 வயதான வில்கின்ஸ் உடல்நிலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை பற்றி அவர் மனைவி ஜாக்கி கூறுகையில்,

 

wilkins

 

கார்டியாக்  அரெஸ்ட் ஏற்படுபட்டுள்ளதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது எனக்கூறியுள்ளார். இதனால் இங்கிலாந்து கால்பந்து அமைப்புகள் அவர் உடல்நலம் தேற பிராத்தித்து வருகின்றன.     

சார்ந்த செய்திகள்