Published on 19/10/2019 | Edited on 19/10/2019
வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களுக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லெபனான் நாட்டில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் ஆகிய செயலிகளின் வீடியோ சேவைக்கு அந்நாட்டு அரசு சேவை வரியாக இந்திய மதிப்பில் 14 ரூபாய் வசூலிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயற்சித்தபோது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. பொதுமக்களின் இந்த போராட்டத்தையடுத்து சமூகவலைதளங்களுக்கான சேவை வரி திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.