Skip to main content

லக்ஷ்மி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல் மோசடி புகாரில் கைது...

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

லண்டனில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரான லக்ஷ்மி மிட்டலின் சகோதரரான பிரமோத் மிட்டல் ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

lakshmi mital's brother pramod mital arrested in europe

 

 

பிரமோத் மிட்டல் ஐரோப்பாவின் போஸ்னியா நாட்டில் நிலக்கரி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் பண மோசடி நடந்துள்ளதாகவும், அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி பிரமோத் மிட்டல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ப்ரோமோத மிட்டல் மட்டுமின்றி அந்தத் தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மொத்தம் மூன்று பேரை போஸ்னியா போலீஸார் கைது செய்துள்ளனர்.  மேலும் ஒருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படுகிறது” - ராகுல் காந்தி எம்.பி.

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Major incident on the country democratic institutions Rahul Gandhi MP

 

ஐரோப்பிய நாடுகளில் ஒரு வார காலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

 

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டின் பிரஸெல்ஸ் என்னும் இடத்தில் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்களால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

 

நாட்டின் 60 சதவீத மக்களின் உணர்வுகளை மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை. மணிப்பூரில் ஜனநாயக உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜி20 மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைக்கவில்லை. காஷ்மீரின் முன்னேற்றம், அமைதி மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

இந்திய மக்களை உளவு பார்க்கும் மோடி அரசு;  வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Modi government spying on Indian people

 

140 கோடி இந்திய மக்களின் தரவுகள் மற்றும் தகவல்தொடர்புகளை  மோடி அரசு கண்காணிப்பு கருவிகளை கொண்டு  உளவு பார்த்து வருவதாக லண்டனில் உள்ள ஆங்கில பத்திரிக்கை ஒன்று குற்றச்சாட்டு வைத்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரின் செல்போனில் இருந்து  அவர்களின் தரவுகளை மோடி அரசு உளவு பார்த்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை இஸ்ரேலில் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்ப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது. 

 

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் செல்போனை மோடி அரசு ஒட்டுக்கேட்பதாகவும்,  ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும், அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சியினர் பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மோடி அரசு பதில் எதுவும் தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது.

 

இந்த நிலையில், லண்டனில் உள்ள பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் மோடி அரசு உளவு பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் மற்றும் காக்னைட் என்ற நிறுவனத்திடமிருந்து மோடி அரசு அதிநவீன உளவுக் கருவி வாங்கியுள்ளது. அந்தக் கருவிகளை கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களில் பொறுத்தி மக்களின் தரவுகள் திருடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதை வைத்து, ஒட்டுமொத்த 140 கோடி இந்திய மக்களின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள், குறுந்தகவல்கள், ஈ.மெயில்கள், ஆகிய தரவுகள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணைய தகவல்கள் முதற்கொண்டு இந்த கருவி முலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டின் செப்டியர் நிறுவனம் தனது உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, மற்றும் சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.