நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வீட்டில் உள்ள நாய்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
வடகொரிய நாட்டில் உள்ள உணவுப் பற்றாக்குறை குறித்து ஐநா சபை சமீபத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், '25.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வடகொரியாவில் 60 சதவிகித மக்கள் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்' எனக் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தங்களை மீறி அணு ஏவுகணை சோதனை செய்வதால் வடகொரிய நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை, சமீபத்திய வெள்ளம், கரோனா அச்சுறுத்தல் ஆகியன இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க கிம் ஜாங் உன் எடுத்துள்ள இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதிபரின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து, வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அதிகாரிகள் கைப்பற்றி இறைச்சி கூடத்திற்கும், உயிரியல் பூங்காவிற்கும் அனுப்பி வைக்க ஆரம்பித்துள்ளனர்.