![kas](http://image.nakkheeran.in/cdn/farfuture/_7nddJGfu0L184sfTPfpufOpkU2wEr6GnXxFX5_Hq84/1544537810/sites/default/files/inline-images/images-%281%29-in.jpg)
டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் இறந்த பத்திரிக்கையாளர் கஷோகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடும் போது, ”சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் அவர்" என கூறியது. சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெற துருக்கி சென்றார். அங்கு இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இவர் சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் நிலவி வரும் நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதியால் கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாடு ஆலோசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.