
பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறி கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்பொழுது திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.
கால் இடறி விழுந்த ஜோ பைடனை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக மேலே தூக்கி விட்டனர். இருப்பினும் அவர் விழுந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் தடுக்கி ஜோ பைடன் கீழே விழுந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது நலமாக உள்ளதாகவும், பாதிப்பு ஏற்படவில்லை எனவும் வெள்ளை மாளிகை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.