Skip to main content

மக்களுக்குப் பதிலாக கொடிகள்... பதவியேற்கும் பைடன்..!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

joe biden

 

கடந்த வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கும் கலவரங்களுக்கும் மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தது.

 

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் இன்று (20.01.2021) பதவியேற்கிறார். இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு ஜோ பைடன் பதவியேற்கும் விழா தொடங்க இருக்கிறது. அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் நபர் என்ற பெருமையையும் ஜோ பைடன் இன்று பெறவுள்ளார்.

capitol america

 

இன்று புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்கவுள்ளதையடுத்து, அமெரிக்கா நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்கு நேரில் வரவேண்டாம் என அமெரிக்க மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் மக்கள் திரளாக கலந்துகொள்வது வழக்கம். ஆனால் கரோனா பரவல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறை அதிக அளவில் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளதால், அமெரிக்க மக்கள் சார்பாக 1,91,500 அமெரிக்க கொடிகள் பல்வேறு அளவுகளில் அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு நடப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் வகையில் நடப்பட்டுள்ள இக்கொடிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்