Skip to main content

ஜோ பைடன் அதிரடி; இந்தியர்கள் மகிழ்ச்சி!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

joe biden trump

 

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற வேண்டும். இந்த விசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு எச்-4 விசா வழங்கப்படும். இதன்மூலம் எச்-1பி விசா பெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும்.

 

அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவதை ரத்து செய்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், ட்ரம்பின் உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் எச்-4 விசா பெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணி செய்ய முடியும்.

 

இந்த எச்-4 விசா மூலமான வேலைவாய்ப்பு நடைமுறையில் இருந்தபோது அதிகளவில் பயன்பெற்றது இந்தியர்கள் என்பதால், இந்த நடைமுறை திரும்ப வருவது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்