Skip to main content

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் ஜப்பான்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Japan sends spacecraft to the moon

 

நிலவை ஆய்வு செய்யும் ஜப்பான் விண்கலம் ஸ்சிலிம் (SLIM) நாளை விண்ணில் பாய்கிறது.

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

 

இந்நிலையில் நிலவை ஆய்வு செய்யும் ஜப்பான் விண்கலமான ஸ்சிலிம் நாளை (07.09.23) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 04.40 மணிக்கு ஸ்சிலிம் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் நிலவில் தடம் பதிக்கும் 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும். ஏற்கெனவே இரண்டு முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கரகாட்டம் ஆடி மகிழ்ந்த ஹிரோஷிமா சபாநாயகர்! 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

The Hiroshima Speaker who was happy by karagatam

 

மாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள பல்லவ கால வரலாற்றுச் சிற்பங்களைக் காண்பதற்கு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

 

ஜப்பான் நாட்டின், ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தபோது அங்கு தமிழ்நாட்டில் பாரம்பரிய கலையான கரகாட்டம் நடனம் ஆட்டம் ஆடப்பட்டது. 

 

அப்போது, ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருவரும், கரகாட்ட இசையை ரசித்து கரகாட்ட கலைஞர்களுடன் சேர்ந்து அவர்களும் கரகாட்டம் ஆடினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“கார்த்தியை பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன்” - மனம் திறந்த சூர்யா

 

suriya speech in karthi 25 and japan movie event

 

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலகப் பயணத்தையும் ஒரு சேரக் கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்ட  விழா நடைபெற்றது. 

 

இந்த நிகழ்வில் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, கே.எஸ். ரவிகுமார், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா. ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ். மித்ரன், ஹெச். வினோத், உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

 

நடிகர் சூர்யா பேசும்போது, “ஒட்டுமொத்த தமிழர் உலகமும் கார்த்தியின் பயணத்தை அவ்வளவு அழகாக மாற்றிக் கொடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில் நான் 20 வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அழகான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை என்று ரஜினி சார் சொல்லுவார். அந்த வகையில் கார்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். மணிரத்னம் சாருக்கு இந்த பயணத்தில் நான் நன்றி சொல்கிறேன். ஞானவேல் ராஜா கார்த்தியின் தூணாகவே இருந்திருக்கிறார். பருத்திவீரன் போன்ற ஒரு அழகான காவியத்தை இயக்குநர் அமீர் உருவாக்கிக் கொடுத்தார்.

 

நாங்கள் இருவருமே சில நேரங்களில் தளர்ந்து போய் இவற்றையெல்லாம் விட்டு விடலாமா என்று நினைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் கொடுத்து எல்லைகளைக் கடந்து ஓட உந்து சக்தியாக ரசிகர்கள் இருந்துள்ளனர். நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள். என்னைவிட கார்த்திக்கு தான் நாங்கள் ரசிகர்கள் என்று பல பேர் சொல்வதுண்டு. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எனக்கு வேறு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கார்த்தி தன்னுடைய பாதையை தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருந்தார். நான் கார்த்தியை பார்த்து பொறாமையும் வியப்பும் கொண்டிருப்பேன். 

 

அவர் குடும்பத்திற்கும் வேலைகளுக்கும் சமமான நேரம் ஒதுக்குவதுடன் வருடத்திற்கு இரண்டு முறையாவது பெற்றோர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். டில்லிக்கு பிறகு ரோலக்ஸ் என்பதை நானும் கூட கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறினார்.