Skip to main content

வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது ஆபத்தானது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Published on 13/07/2021 | Edited on 14/07/2021

 

sdf

 

கரோனா தொற்றைத் தடுக்க வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது ஆபத்தாக முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்தில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் காணொளி காட்சி வாயிலாக கூறுகையில், "பல நாடுகளில் கரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. 3வது அலை குறித்த எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டுவருகிறது. கரோனா பரவலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே ஆயுதம். தற்போது தடுப்பூசிகளைக் கலந்து போடுவது, பொருத்திப் பார்ப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது ஆபத்தானது, இதுபற்றிய தரவுகள் நம்மிடம் இல்லை. எனவே இத்தகைய விபரீத வேலைகளில் யாரும் ஈடுபட கூடாது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கிட்டத்தட்ட காசா ஒரு கல்லறை' - உலக சுகாதார அமைப்பு பகிரங்க அறிவிப்பு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

'Gaza is almost a graveyard' - World Health Organization public announcement

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை கிட்டத்தட்ட ஒரு கல்லறை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனை வளாகத்திலேயே அதிகப்படியாக குவிந்துள்ளது. தொடரும் போர் சூழல் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ஆட்டிப்படைக்க வரும் 'எக்ஸ்' - மீண்டும் அச்சத்தில் உலக நாடுகள்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

NN

 

கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே முகக்கவசத்திற்குள் முடக்கிப் போட்ட கொரோனா வைரஸின் விஸ்வரூபம் தணிந்து இயல்பு நிலைக்கு சென்றிருக்கும் நிலையில் கொரோனாவை விட 20 மடங்கு சக்தி வாய்ந்த கொடிய வைரஸ் ஒன்றின் பரவல் இருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

வைரஸ்களின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து புறப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்ததை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது. இதுவரை 70 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அச்சுறுத்தல் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் முடக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தடுப்பூசி, சமூக இடைவெளி எனும் பாதுகாப்பு வழிகாட்டு விதிமுறைகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒருவழியாக தடுக்கப்பட்டது.

 

X

 

இந்நிலையில் புதிதாக ஒரு வைரஸ் சவால் கொடுத்து வருவதாக விஞ்ஞானிகள், சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பரவி வரும் அந்த நோய்க்கு 'எக்ஸ்' என உலகச் சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. 'எக்ஸ்' வைரஸ் ஐந்து கோடி உயிர்களைப் பறிக்கும் ஆற்றல் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் 'எக்ஸ்' தொற்று கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தும், 67% இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளதாம். ஆயிரக்கணக்கான வைரஸ்களை உள்ளடக்கிய 25 புதிய வைரஸ்களை ஆராய்ந்ததில் 'எக்ஸ்' வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதற்கான மருந்துகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பின் நிபுணரும், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக் குழுவின் தலைவருமான காதே பின்ஹாம் தூக்கிப்போட்ட குண்டு உலக நாடுகளை மீண்டும் முகக்கவசத்தை கையிலெடுக்க வைத்துள்ளது.