Published on 08/10/2020 | Edited on 08/10/2020

அமெரிக்கவைச் சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான ‘ப்ளூ அகோர்ன்’ நிறுவனத்தை இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனம் 125 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தை வாங்குவதன்மூலம் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கு கூடுதல் பலம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் அமெரிக்க நிறுவனமான ‘ப்ளூ அகோர்ன்’ நிறுவனத்தை இந்திய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோஸிஸ் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.