Published on 31/12/2021 | Edited on 31/12/2021
![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/kgduwhfE0e93jpvxjDFQJJgt3lVyMRVewe6XYtHUPqg/1640928430/sites/default/files/inline-images/REFR.jpg)
உலகமெங்கிலும் கரோனா மீண்டும் அச்சுறுத்தலை தொடங்கியுள்ளது. கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலும், தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது அந்தநாட்டில் ஏற்பட்டுள்ள கரோனா அலைக்கு ஒமிக்ரான் பாதிப்பே காரணம் என கருதப்படுகிறது.
இந்த சூழலில் அமெரிக்காவில் ஒரேநாளில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 564 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இதில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.