Published on 18/08/2022 | Edited on 18/08/2022
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமான மாலை நேர தொழுகையின் போது பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பலர் சிக்கி படுகாயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்குப்பின்னால் இதேபோல் பலமுறை மசூதிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.