பாகிஸ்தான் அதிபராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக நேற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார்.

3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு அரசு ரீதியிலான பல சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் வெள்ளை மாளிகை சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். இம்ரான் கான் நேற்று அமேரிக்கா செல்லும் போது தனி விமானம் மூலமாக பயணம் செய்யாமல், வர்த்தக விமானத்தில் பயணிகளுடன் பயணம் செய்து வாஷிங்டன் சென்றடைந்தார். ஆனால் வாஷிங்டன் விமான நிலையத்தில் அவரை வரவேற்க அமெரிக்காவின் சார்பில் அதிகாரிகள் யாரும் வரவில்லை.
பொதுவாக ஒரு நாட்டின் பிரதிநிதி அரசு முறை பயணமாக மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது அந்நாட்டு முக்கிய அதிகாரிகள் அல்லது தலைவர்கள் விமான நிலையத்தில் வந்து வரவேற்பது வழக்கம். ஆனால் இம்ரான் கானை வரவேற்க யாரும் வராதது அந்நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் வேண்டுமென்றே அவமானப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு மக்கள் சமூகவலைத்தளங்களில் அமெரிக்காவை குற்றம் சாட்டி வருகின்றனர்.