அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார்.

Advertisment

imran khan speech in unga

அப்போது பேசிய அவர் இந்திய பிரதமர் மோடியை, இந்திய ஜனாதிபதி என குறிப்பிட்டது பேசியது கேலிக்குள்ளாகியுள்ளது. சுற்றுசூழல், தீவிரவாதம், தொழில்துறை ஆகியவற்றை பற்றி இந்திய பிரதமர் மோடி ஐநா மாநாட்டில் பேசிய நிலையில், பாகிஸ்தான் பிரதமரோ காஷ்மீர் விவகாரத்தை பற்றி மட்டுமே சுமார் 20 நிமிடங்கள் அவரை பேசினார். இதுகுறித்து அவர் பேசும்போது தான், இந்திய பிரதமர் மோடி என கூறுவதற்கு பதிலாக, இந்திய ஜனாதிபதி மோடி என தெரிவித்தார். அவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது.