Skip to main content

கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ இந்தியா வரவில்லை! - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Published on 21/02/2018 | Edited on 03/03/2018

எனது ஒருவாரப் பயணம் இந்தியா - கனடா இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கே தவிர, கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தெரிவித்துள்ளார்.

 

Juston


ஒருவார கால அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தன் குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை இந்தியா வந்த அவர், தாஜ்மகால், சபர்மதி ஆசிரமம், மும்பை வர்த்தகக் கூட்டம் என பலவற்றில் கலந்துகொண்டார்.

மும்பை வர்த்தகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ‘நான் கைக்குலுக்குவதற்கோ, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கோ இந்தியா வரவில்லை. மாறாக கனடா - இந்தியா இடையே இருக்கும் உறவை மேம்படுத்துவதற்கும், மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வந்திருக்கிறேன். இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மட்டுமின்றி, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை, பொருளாதார, கலாச்சார மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்தும். இதை சாத்தியமாக்க நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன’ என தெரிவித்தார்.

மேலும், ‘கனடாவும், இந்தியாவும் உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகள். இந்தியா மக்கள்தொகையிலும், கனடா மேற்பரப்பு நிலத்திலும் ஜனநாயகத்தைக் கொண்டது. எனவே, நிச்சயமாக நம்மால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இதை இரண்டு அரசுகளுக்கு இடையிலான உறவு என்பதைவிட இருநாட்டு மக்களுக்கான உறவு என்றே நான் சொல்வேன்’ எனவும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவுடன் மோத விரும்பவில்லை” - கனடா பிரதமர்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Canadian Prime Minister says Doesn't want to clash with India

 

கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

 

அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

 

மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது. இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் சேவைகளை மறு அறிவிப்பு வரும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கனடாவுடனான உறவில் விரிசல் சரியாகும் நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வர கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் மீண்டும்  விசா சேவையை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம், கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வர வழிவகை செய்யப்பட்டது.

 

இந்த பிரச்சனை பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “இந்தியாவுடனான சண்டையை கனடா இப்போது விரும்பவில்லை.  ஆனால், ஹர்தீப் சிங் நிஜார் கொலை தொடர்பான விசாரணையில் ஒன்றிணைந்து செயல்படுமாறு இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம். பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறினால், முழு உலகத்திற்கும் ஆபத்தாகி விடும். எனவே, இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா விரும்புகிறது. 

 

ஆரம்பத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை இந்திய அரசும், உலக நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள உண்மையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். ஆனால், இந்தியா வியன்னா உடன்படிக்கையை மீறி தூதரக அதிகாரிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து அவர்களை வெளியேற்றியது. இதனால், நான் ஏமாற்றமடைந்து கவலையடைந்தேன். இது உலகெங்கும் உள்ள உலக நாடுகளுக்கும் கவலை அளிக்கிறது. 

 

ஏனென்றால், ஒரு நாடு மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளை பாதுகாக்காவிட்டால், அது சர்வதேச உறவுகளுக்கு ஆபத்தாக மாறிவிடும். அதனால், ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் பணியாற்றி முயற்சித்தோம். தொடர்ந்து அவ்வாறே செயல்படுவோம். இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதனால், நாங்கள் இப்போது சண்டை செய்ய விரும்பவில்லை. ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காக சண்டை செய்வோம்” என்று கூறினார். 

 

 

 

 

Next Story

“இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர விரும்புகிறோம்” - கனடா பிரதமர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 Canadian Prime Minister says We want to continue our constructive relationship with India

 

கனடாவில் உள்ள பயங்கரவாத புலிப்படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், பயங்கரவாத புலிப்படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகப் பயங்கரவாத தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதி நிஜார் கொலைக்கு இந்திய உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், கனடா தூதரக அதிகாரியிடம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 

 

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப பெற வேண்டும் என்று கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

 

இது குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்துத்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, “ கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது மிகவும் அவசியம். வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தை கடந்து வருகிறோம். நிலைமையை மேலும் தீவிரப்படுத்த விரும்பவில்லை. அதனால், இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.