மாறிவரும் உலக சூழலில் மனிதன் மட்டுமின்றி விலங்குகளும் பல்வேறு புதிய மற்றும் அறிய மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. அந்த வகையில் டி.என்.ஏ குறைபாடு காரணமாக மனித முகத்துடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் அர்ஜென்டினா நாட்டில் நடந்துள்ளது.
அர்ஜென்டினா நாட்டின் வில்லா அனா என்ற பகுதியில் விவசாயி ஒருவர் வளர்ந்துவந்த மாடு சமீபத்தில் கன்று ஒன்றை ஈன்றது. இந்த கன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே உலகம் முழுவதும் வைரலானது. இதற்கான முக்கிய காரணம் அதன் முக அமைப்பே. மாட்டின் உடல் அமைப்பை கொண்ட அந்த கன்றுக்கு முகம் மட்டும் மனித முகம் போல அமைந்துள்ளது. இதனை பார்த்த பலரும் அதிசயித்து அதனுடன் புகைப்படம் எடுத்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஆராய்ச்சியாளர்கள், பல தலைமுறைகளாக அந்த மாட்டின் டி.என்.ஏ வில் ஏற்பட்ட மாற்றங்களால் இப்படி நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளனர். மாறுபட்ட மண்டை ஓடு அமைப்பு தான் அதன் இந்த முக அமைப்புக்கு காரணம் எனவும், உணவு, சுற்றுசூழல் உள்ளிட்ட பல புறக்காரணிகளால் பாதிக்கப்பட்ட டி.என்.ஏ காரணமாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.