சீனாவின் குவாங்சோ நகரத்திலிருந்து நியூயார்க்கிற்கு கடந்த செவ்வாய்கிழமையன்று, சீனா சதர்ன் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் 70 வயது மதிக்கதக்க முதிய பயணி ஒருவருக்கு திடீரென டையூரா என்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது சிறுநீர் கழிக்க முடியாமல், சிறுநீர் பையில் அடைத்துக்கொண்டு, கடுமையான வலியால் அந்த முதிய பயணி மிகவும் தவித்து கதறித் துடித்துப்போனார். இதனால் அவரத குடும்பத்தினரும் தவித்தனர்.

Advertisment

அப்போது விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் முதியவரின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த அவர், விமானத்தில் இருந்த முதலுதவி பொருட்களான ஆக்ஸிஜன் சிலிண்டர், சிரிஞ்ச் மற்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினர். அளவுக்கதிகமான சிறுநீர் இருந்ததால், இதை மட்டும் வைத்து அவரது சிறுநீரை வெளியேற்ற முடியவில்லை. சிறுநீர் வெளியேறினால் மட்டுமே முதியவரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில், குழாயின் மூலம் கொஞ்சம் கூட யோசிக்காமல், தனது வாயால், தானே சிறுநீரை உறிஞ்சி பக்கத்தில் இருந்த கோப்பையில் துப்பினார். சுமார் 800 மில்லி சிறுநீரை, கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் போராடி வெளியேற்றினார் அந்த மருத்துவர். நீண்ட நேரம் நடந்த இந்த சிகிச்சைக்குப் பிறகு முதியவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

Advertisment