பாகிஸ்தானில் பெய்து வரும் பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் டிசம்பரில் ஆரம்பிக்கும் பனி ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்து நீடிக்கும். ஜனவரி இறுதியில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டிற்கான பனிப்பொழிவு தற்போது வரலாறு காணாத வகையில் கடுமையான வீசி வருகின்றது.

Advertisment

fg

கடந்த ஒருவாரமாக கராச்சி, பெஷாவார் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 14 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக கடுமையான பனிப்பொழிவாக இது இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.