Skip to main content

ஹைதி நிலநடுக்கம்! - ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

HAITI

 

வட அமெரிக்க நாடான ஹைதியில், நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தநாட்டின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் மேற்குப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 1,297 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 5,700 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் 13,600 கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்துள்ளன. 13,700 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஹைதிக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

 

அமெரிக்கா, ஹைதிக்கு மீட்புப்படைகளை அனுப்பியுள்ளது. இதற்கிடையே ஹைதி பிரதமர், அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்